வியாழன், 28 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By கே.என்.வடிவேல்
Last Updated : திங்கள், 2 மே 2016 (12:35 IST)

செக்ஸ் விளையாட்டில் தூள்கிளப்ப கைகொடுக்கும் வெற்றிலை

செக்ஸ் விளையாட்டில் தூள்கிளப்ப கைகொடுக்கும் வெற்றிலை

மனிதனுக்கு காமத்தை தூண்டும் வகையில் வெற்றிலையில் அற்புத சக்தி உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
 

 

 
தமிழக மக்கள் அன்றாட வாழ்வில் வெற்றிலைக்கு முக்கியத்துவம் உண்டு. குறிப்பாக, திருமணம் நிகழ்ச்சிகளில் வெற்றிலைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். அதன் முக்கியத்துவம் தற்போது தெரியவந்துள்ளது.
 
இது குறித்து, பிரபல டாக்டர் ஒருவர் கூறுகையில், வெற்றிலை பல்வேறு மூலிகை மருத்துவ குணம் கொண்டது. வெற்றிலை பல்வேறு மருத்துவ பயன்களை மக்களுக்கு வழங்குகிறது.
 
வெற்றிலையில், வெற்றிலையில் 84.4% நீர்ச்சத்தும், 3.1% புரதச் சத்தும், 0.8% கொழுப்புச் சத்தும் நிறைந்துள்ளது. இதில் கால்சியம், கரோட்டின், தயமின், ரிபோபிளேவின் மற்றும் வைட்டமின் சி உள்ளது. கலோரி அளவு 44% சத்துக்கள் உள்ளது.
 
வெற்றிலைக்கு நல்ல மருத்துவக் குணம் உண்டு. வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது. வெற்றிலையைப் பயன்படுத்தி பல நோய்களையும் குணப்படுத்தலாம்.
 
சமீபத்தில் நடைபெற்ற ஒரு ஆராய்ச்சியில், வெற்றிலையில், மிகவும் வீரியமிக்க நோய் எதிர்ப்புத் திறன் உள்ள சவிக்கால் (Chavicol) என்னும் பொருள் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
 
குறிப்பாக, வெற்றிலையை உண்டால், மனிதனுக்கு தேவையான காமசக்தியை அது தூண்டுகிறது. இது இயற்கையாக மனிதனுக்கு கிடைக்கும் வகையில் இயற்கை கொடுத்துள்ள அற்புதம் ஆகும்.
 
இதனாலே, நமது முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் திருமண விழாக்களில் வெற்றிலை கொடுத்து உடலுக்கு தேவையான சக்தியை கொடுத்துள்ளனர்.
 
வெற்றிலை எங்கும், எளிதில் கிடைக்க கூடியது. இதை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ஆண்மை குறைபாடு நீங்கும். நல்ல விரைப்புத் தன்மை ஏற்படும். மனைவியுடன் நீண்ட நேரம் இன்ப விளையாட்டில் விளையாடலாம். எனவே,  செக்ஸ் வாழ்க்கைக்கு வெற்றிலை இன்றியமையாத வரப்பிரசாதம் ஆகும்.
 
செக்ஸ் குறைபாட்டிற்கு, கண்ட கண்ட மருத்துகளை அதிக அளவில் பணம் கொடுத்து வாங்கி உபயோகிப்பதை விட, தினமும் ஒரு சில வெற்றிலையை வாயில் போட்டு மென்று தின்னலாம். மேலும், விழாக்களுக்கு செல்லும்போதும் வெற்றிலையை பயன்படுத்தலாம். இவ்வாறு செய்தாலே, நல்ல மாற்றம் தெரியவரும் என்றார்.