வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 19 செப்டம்பர் 2017 (12:41 IST)

குடுமி சண்டையில் கலைக்கட்டிய பெண்கள் (வீடியோ)

தெலங்கானா அரசால் வழங்கப்பட்ட இலவச சேலையை வாங்கச் சென்ற பெண்கள் குடுமி சண்டையில் ஈடுபட்ட வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது.


 

 
நவராத்திரி விழாவின்போது கொண்டாடப்படும் பதுகம்மா விழாவை முன்னிட்டு பெண்களுக்கு இலவச சேலை வழங்கப்படும் என தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் சுதந்திர தின விழாவின்போது அறிவித்து இருந்தார்.
 
அதன்படி 500 டிசைன்கள் கொண்ட 1.04 கோடி சேலைகள் குஜராத் மற்றும் தெலங்கானா கைத்தறி நெசவாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டது. இந்த இலவச சேலைகள் நேற்று வழங்கப்பட்டது. இதை பெற பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
 
புடவை கொடுக்க தொடங்கியதும் பெண்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டு குடுமி சண்டையாக மாறியது. சாலையிலே சண்டையிட்டுள்ளனர். இதை தடுக்க முயன்ற பெண் காவலரும் அட போங்க என்று போய்விட்டார்.
 
இதையடுத்து சேலையை பெற்ற பெண்கள், சேலை தரம் இல்லை என கூறி சாலையில் போட்டு எரித்தனர். சிலர் சேலையால் வாகனங்களை துடைத்தும், குப்பை தொட்டிகளில் வீசியும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதுகுறித்து அந்த பெண்கள் கூறியதாவது:-
 
இந்த இலவச சேலை ரூ.100 ஐ விட குறைவாக இருக்கும். இதை வாங்க நாங்கள் எங்களது வேலையை விட்டு நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தோம். தரம் குறைவான புடவைகளை கொடுத்து முதல்வர் எங்களை அவமானப்படுத்திவிட்டார் என்றனர்.
 

நன்றி: NDTV