Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

5 வயதில் தேவதாசியான சிறுமி: பெற்றோர், சாமியார் கைது!

5 வயதில் தேவதாசியான சிறுமி: பெற்றோர், சாமியார் கைது!

ஞாயிறு, 18 ஜூன் 2017 (18:22 IST)

Widgets Magazine

கர்நாடகா மாநிலம் குல்பர்கா மாவட்டத்தில் 5 வயது சிறுமியை தேவதாசி முறையில் தள்ளி, பாலியல் தொழில் செய்ய வைத்த பெற்றோர்கள் மற்றும் சாமியாரை போலீசார் கைது செய்துள்ளனர்.


 
 
இந்தியாவில் தேவதாசி முறையானது வழக்கமான ஒன்றாக பல ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தது. அதன் பின்னர் பல சீர்திருத்தவாதிகளின் முயற்சியால் தேவதாசி முறை ஒழிப்பு சட்டம் கொண்டு வரப்பட்டு முற்றிலுமாக இந்த தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது.
 
ஆனால் ரகசியமாக இந்த தேவதாசி முறை சில மாநிலங்களில் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கர்நாடகாவின் குல்பர்கா மாவட்டத்தில் மாவின்சுர் கிராமத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் 5 வயது சிறுமிக்கு தேவதாசி பட்டம் அளிக்கப்பட்டு மதச்சடங்குகளை நடத்தியுள்ளனர் அந்த சிறுமியின் பெற்றோரும் கோவில் சாமியாரும்.
 
தற்போது அந்த சிறுமிக்கு 10 வயதாகியுள்ளது. இந்நிலையில் சிறுமி தேவதாசியாக வாழ்ந்து வருவது குழந்தைகள் நல குழுவுக்கு தெரியவந்தது. இதையடுத்து, அந்த சிறுமியை தேவதாசி முறையில் இருந்து மீட்ட குழந்தைகள் நல அமைப்பினர் அளித்த புகாரின் பேரில், சிறுமியை தேவதாசியாக்கி பாலியல் தொழிலில் தள்ளிய பெற்றோர், சடங்கு நடத்திய சாமியாரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

தினகரன், எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரை!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, வேலுமணி, ...

news

மேஜிக் என்ற பெயரில் பெண்களிடம் சில்மிஷம் செய்த வாலிபர்

சீனாவில் மேஜிக் என்ற பெயரில் பொதுஇடத்தில் பெண்களிடம் சில்மிஷம் செய்த வாலிபரை ...

news

எம்.எல்.ஏ.சரவணன் வீடியோ மார்பிங் செய்யப்பட்டது: மாஃபா பாண்டியராஜன்

எம்.எல்.ஏ.சரவணன் வீடியோ மார்பிங் செய்யப்பட்டது என்றும், 3 மாதம் கழித்து வெளியான ...

news

விருந்தில் மாட்டிறைச்சி இல்லாததால் நின்றுபோன திருமணம்

உத்தரபிரதேச மாநிலத்தில் திருமண விருந்தில் மாட்டிறைச்சி இல்லை என திருமணம் நின்றுபோன ...

Widgets Magazine Widgets Magazine