வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 10 ஜனவரி 2017 (15:01 IST)

உணவில்லா ராணுவ வீரர்கள்: இதற்கென்ன சொல்லுகிறீர்கள் தேச பக்தர்களே??

மத்திய அரசின் நிர்வாக சீர்கேட்டால், ராணுவ வீரர்கள் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் பட்டினியாக கிடைப்பது தற்போது அம்பலமாகியுள்ளது.


 
 
ஜம்மு-காஷ்மீர்-பாகிஸ்தான் எல்லையில், பணியாற்றும் எல்லை பாதுகாப்பு படை வீரரான கான்ஸ்டபிள் அந்தஸ்தில் உள்ள தேஜ் பகதூர் யாதவ் இதனை வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
 
வீடியோவில் தேஜ் பகதூர் கூறியவை, நாங்கள் ஏறத்தாழ 11 மணி நேரம் நின்றபடியே பணியாற்றுகிறோம். அரசு என்னவோ எங்களுக்கு தேவையான உணவு பொருட்களை வாங்கி அனுப்புகிறது. ஆனால் உயர் அதிகாரிகள் அதை சட்ட விரோதமாக விற்று தங்கள் சட்டைப் பையில் போட்டுக்கொள்கிறார்கள். 
 
ஒரு சில பொருட்களை கொண்டே சமையல் செய்ய அதிகாரிகள் உத்தரவிடுகிறார்கள். காலையில் எங்களுக்கு கிடைப்பது பரோட்டாவும், டீயும் தான். பரோட்டாவுக்கு காய்கறி கூட்டோ அல்லது குறைந்தபட்சம் ஒரு ஊறுகாய் துண்டு கூட கிடையாது. பரோட்டாவை அப்படியே சாப்பிட்டு டீ குடித்துவிட்டு கிளம்ப வேண்டும்.
 
அதேபோல் மதியம் எங்களுக்கு தரப்படும் சாம்பாரில் எந்த ஒரு காய்கறியும் இருக்காது. மஞ்சள், உப்பு இந்த இரண்டும் தான் இருக்கும். இதனுடன் தரப்படுவது ரொட்டிகள் தான். இப்படிப்பட்ட சாப்பாட்டை உட்கொண்டு வீரர்கள் எப்படி பணியாற்ற முடியும்? 
 
நாங்கள், எங்களது குறைகளை சொல்லியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த வீடியோவை பார்த்துவிட்டு பிரதமர் இதில் தலையிட வேண்டும் என்று உருக்கமாக கோரிக்கை வைத்துள்ளார்.
 
பண மதிப்பிழப்பின் போது, எல்லையில் ராணுவ வீரர்கள் கால்கடுக்க கஷ்டப்பட்டு பணியாற்றுகிறார்கள். மக்களால் இரண்டு மணி நேரம் ஏடிஎம் வாசலில் நிற்க முடியாதா என்ற கேள்வியை கேட்ட பாஜக அரசு, இதற்கு என்ன செய்யப்போகிறது என்று பார்ப்போம்.