செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 3 நவம்பர் 2015 (16:13 IST)

ஷாருக்கான் பாகிஸ்தானின் கைக்கூலி : சாத்வி பிராச்சி காட்டம்

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பாகிஸ்தானின் கைக்கூலி என்று விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர்களில் ஒருவரான சாத்வி பிராச்சி கருத்து தெரிவித்துள்ளார்.


 
 
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தனது 50 வது பிறந்த நாளை நேற்று மும்பையில் கொண்டாடினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில் “ மதசார்பற்ற நாடான இந்தியாவில் அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உண்டு. தற்போது, இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்து வருவது கவலை அளிக்கிறது. இது இப்படியே தொடரும் எனில், முன்னனி நாடாக இந்தியா உருவாவதற்கு பெரும் தடைக்கற்களாக இருக்கும்” என கூறினார்.


 

 
இது பற்றி, எப்போதும் சர்சைக்குரிய கருத்துகளை கூறி வரும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர்களில் ஒருவரான சாத்வி பிராச்சி “ஷாருக்கான் பாகிஸ்தானின் கைக்கூலி. சகிப்புத்தன்மை தொடர்பாக அவர் கூறிய கருத்திற்காக, அவர் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்து, அவரை பாகிஸ்தானிற்கு நாடு கடத்த வேண்டும். மேலும் மத்திய அரசு வழங்கியுள்ள பத்மஸ்ரீ  விருதை ஷாருக்கான் திருப்பியளிக்க வேண்டும்” என்று கருத்து தெரிவித்துள்ளர்.
 
இது மும்பை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.