வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By விஜயகுமார் மல்ஹோத்ரா
Last Updated : வெள்ளி, 15 ஜூலை 2016 (21:27 IST)

தாய் மொழியோடு ஆங்கிலமும் வேண்டும்

மற்றவை பற்றி பேசுவதை விட முதலில் கல்வியை பொறுத்தவரை மீடியம் மற்றும் சப்ஜெக்ட் என்ற இரண்டும் வெவ்வேறு என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.  


 


ஒரு குழந்தை அதன் தாய்மொழியில் படிக்கும் போது, அது அந்த குழந்தையின் கிரியேட்டிவ் திறனை கண்டிப்பாக வளர்க்க உதவும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், ஆங்கிலத்தையும் இரண்டாவது மொழியாக கற்றுக்கொள்வது தவறு இல்லை.
 
வளரும் நாடுகளில் ஆங்கிலம் என்பது அவசியமான ஒன்றாக இருக்கிறது. இந்தியாவில் அவசியம் மட்டுமில்லை, இன்றியமையாததும் கூட. இணையத்தில் 81 சதவீதம் ஆங்கிலமே பயன்படுத்தப்படுகிறது. அதேபோல், மருத்துவம், அறிவியல், பொறியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் சம்பந்தப்பட்ட அனைத்து புத்தகங்களும் ஆங்கிலத்தில்தான் கிடைக்கிறது. 
 
மகாராஷ்டிராவில் பெரும்பாலன பள்ளிகள் மராத்தி வழி கல்விதான் பயிற்றுவிக்கப்படுகிறது. அதே சமயம் ஆங்கிலமும் கட்டாயமாக கற்றுக் கொடுக்கப்படுகிறது. அதனால்,  அங்கு படித்த மாணவ மாணவிகள் போட்டி தேர்வுகளில் சிறந்து விளங்குகிறார்கள். எனவே ஆங்கிலம் என்பது கண்டிப்பாக கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்றாகவே இருக்கிறது.
 
A) ஏற்றுக் கொள்கிறேன்
 
B) ஏற்றுக் கொள்ள முடியாது
 
C) ஏதேனும் கருத்து இருந்தால் கூறலாம்

மேலும், 1968ஆம் ஆண்டு, இந்திய பாராளுமன்றத்தில் ஒரு சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி, பள்ளிகளில் ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழிகள் ஆகிய மூன்று மொழிகளும் கட்டாயமாக்கப்பட்டது.  கல்வி மற்றும் பிராந்திய மொழி என்பது அந்தந்த மாநிலத்தை பொருத்து மாறும் என்றாலும், ஹிந்தி பேசும் மற்றும் பேசாத மாநிலமாக இருந்தாலும் அது பின்பற்ற வலியுறுத்தப்பட்டது.
 
ஹிந்தி பேசப்படும் பீகார் மற்றும் உத்திரபிரதேசம் மாநிலங்களில் மூன்று மொழி இல்லாமல் ஹிந்தி மட்டுமே பயிற்றுவிக்கப்பட்டது. இதன் காரணமாக, ஹிந்தி மட்டும் படித்து விட்டு வெளியே வந்த மாணவர்கள், போட்டி தேர்வுகளில் ஆங்கிலம் தெரியாமல் முழித்தனர். மேலும், ஹிந்தி அதிகாரி பதவியில் நியமிக்கப்பட்டவர்கள், ஆங்கிலத்தை மொழி பெயர்க்க தெரியாமல் சிரமப்பட்டனர். இதனால் அவர்கள் அந்த வேலைக்கு பொருத்தமில்லாதவர்களாக இருந்தனர்.  அதேபோல், பத்திரிக்கை துறைகளில் பணிபுரிந்தவர்களும், ஆங்கிலம் தெரியாததால், வேலைக்கு பொருத்தமில்லாதவர்களாக கருதப்பட்டனர்.
 
சில வருடங்களுக்கு பிறகு, ஆங்கிலம் அவர்களுக்கு தேவையான ஒன்றாக இருந்தது. அதன்பின், ஹிந்தி பேசாத மாநிலங்களில், ஆங்கிலத்தை முதன்மை மொழியாக மாற்றி மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டது. அதேபோல், சமஸ்கிருதமும் கண்டிப்பாக கற்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால் நான் கேட்பதெல்லாம், ஹிந்தி பேசும் மாநிலங்கள் ஹிந்தி, ஆங்கிலம், ஆகியற்றை முதன்மையாக வைத்துக் கொண்டு அடுத்த மொழியாக சமஸ்கிருதம் அல்லது உருது மொழியை பயிற்றுவிக்க வேண்டும் என்பதே என் கருத்து. 
 
ஹிந்தி பேசும் மாநிலங்களில், தாய் மொழியே முதன்மையான மொழியாக இருக்க வேண்டும்.
 
முதல் மொழி : ஹிந்தியே தாய்மொழி
 
இரண்டாவது மொழி : அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் நூலக மொழியாக   ஆங்கிலம் திகழ்வது
 
மூன்றாவது மொழி : ஏதோ ஒரு பிராந்திய மொழியுடன் சமஸ்கிருதம், உருது அல்லது ஹிந்தி
 
அதேபோல், ஹிந்தி பேசாத மாநிலங்களில் மீடியம் கல்வியாக தாய்மொழியாக பயிற்றுவிக்க வேண்டும்:
 
முதல் மொழி : தாய்மொழியே அலுவலக மொழி
 
இரண்டாவது மொழி :  நவீன அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் நூலக மொழியாக   ஆங்கிலம் திகழ்வது
 
மூன்றாவது மொழி : ஏதோ ஒரு இந்திய பிராந்திய மொழியுடன் சமஸ்கிருதம், உருது அல்லது ஒரு அந்த மாநிலத்தின் அலுவலக மொழி
 
A) ஏற்றுக் கொள்கிறேன்
 
B) ஏற்றுக் கொள்ள முடியாது
 
C) ஏதேனும் கருத்து இருந்தால் கூறலாம்
 

By Vijay Kumar Malhotra