செவ்வாய், 19 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By bala
Last Modified: திங்கள், 6 பிப்ரவரி 2017 (12:21 IST)

சசிகலாவுக்கு தகுதி உள்ளதா என்று கேள்வி கேட்கும் உரிமை மக்களுக்கும் உள்ளது: பா.சிதம்பரம் காட்டம்

நேற்று நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏ கூட்டத்தில், சட்டமன்றக் கட்சித் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.


 

மேலும், அவரே முதல்வராக வேண்டும் என தற்போதைய தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் முன்மொழிந்தார். மேலும், தனது ராஜினாமா கடிதத்தையும் அவர் ஆளுநருக்கு அனுப்பியுள்ளார். வருகிற 9ம் தேதி தமிழகத்தின் முதல்வராக சசிகலா பதவியேற்பார் எனக்கூறப்படுகிறது. சசிகலா முதல்வராக தேர்வு செய்யப்பட்டது குறித்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பில்லை என்றே கூறலாம். சமூக வலைதளங்களிலும் கடுமையான பதிவுக்ளை மக்கள் தெரிவித்து வருகின்றனர். பொதுமக்கள் மட்டுமின்றி தமிழக அரசியல் கட்சிகத் தலைவர்களும்  தங்களது எதிப்புகளை பதிவு செய்துவருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், தங்களது தலைவரை தேர்வு செய்யும் உரிமை அதிமுகவினருக்கு உள்ளது. அதேபோல், தமிழக முதல்வராவதற்கு சசிகலா தகுதியானவரா என்று கேள்வி கேட்கும் உரிமை மக்களுக்கும் உள்ளது என்று தனது டுவிட்டர் பக்கத்தில் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் அண்ணா, காமராஜர் போன்ற தலைவர்கள் அலங்கரித்த முதல்வர் நாற்காலியில் அலங்கரித்த நாட்களை நினைத்து பார்க்கிறேன். ஆனால் தற்போது அதற்கு எதிரான பாதையில் அதிமுக மற்றும் தமிழக மக்கள் பணிக்கின்றனர் என்றும் பதிவு செய்துள்ளார்.