வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Updated : வியாழன், 11 பிப்ரவரி 2016 (11:47 IST)

மோடியுடன் மோதும் அவரது மனைவி

பிரதமர் நரேந்திர மோடியின் பாஸ்போர்ட் விவரங்களை கேட்டு அவரது மனைவி யெசோதாபென், பாஸ்போர்ட் அலுவலகத்தில் மனு ஒன்று அளித்துள்ளார்.


 
 
நரேந்திர மோடி பிரதமர் ஆவதற்கு முன் அவர் திருமணம் ஆனவர் என நாட்டில் பலருக்கும் தெரியாது. திடீரென யெசோதாபென் அவருடைய மனைவி என கூறினார்கள். அவரும் அதை மறுக்கவில்லை, தனது பாரளுமன்ற தேர்தல் வேட்புமனுவில் திருமணமானவர் என குறிப்பிட்டிருந்தார்.
 
சிறு வயதிலேயே விருப்பம் இல்லாமல் திருமணமானதாகவும், தனக்கு அதில் உடன்பாடு இல்லாமல், அரசியல் ஆர்வம் காரணமாக பிரிந்து வந்துவிட்டதாக தகவல்கள் வெளியானது.
 
இந்நிலையில் மோடியுன் சேர்ந்து வாழ தனக்கு விருப்பம் என யெசோதபென் தெரிவித்தும், அவர் பதில் அளிக்கவில்லை. இதனையடுத்து வெளிநாட்டில் உள்ள தனது உறவினர்களை சந்திக்க செல்ல யெசோதாபென் பாஸ்போர்ட் வேண்டி கடந்த நவம்பர் மாதம் விண்ணப்பித்திருந்தார்.
 
அவர் தனது பாஸ்போர்ட் விண்ணப்பத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி என குறிப்பிட்டிருந்தார். ஆனால், யெசோதாபென் தனது திருமண சான்றிதழையோ அல்லது மோடியை திருமணம் செய்ததற்கான இருவரும் கையெழுத்திட்ட பிரமாண பத்திரத்தையோ தாக்கல் செய்யவில்லை.
 
இதனை காரணமாக காட்டி அவரது பாஸ்போர்ட் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் தனக்கு பாஸ்போர்ட் நிராகரிக்கப்பட்டது என்றால், மோடிக்கு எப்படி பாஸ்போர்ட் அளித்திருபார்கள் என யெசோதபென் அறிய முயன்றுள்ளார்.
 
இதனை தொடர்ந்து யெசோதாபென் மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டப்படி ஒரு விண்ணப்பம் அளித்துள்ளார். அதில் யெசோதாபென், மோடி பாஸ்போர்ட் பெறுவதற்காக திருமணம் தொடர்பாக தாக்கல் செய்த ஆவணங்களை வழங்கும்படி கூறியுள்ளார்.
 
அப்படி போடு அரிவாள!...