வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : வெள்ளி, 4 மார்ச் 2016 (10:02 IST)

127 பயணிகளுடன் மும்பையில் தரை இறங்கிய விமானத்தின் கியரில் தீடீர் கோளாறு

மும்பை விமான நிலையத்தில் விமானம் ஒன்று தரை இறங்கியபோது கியர் இயங்காததால் பெரும் பதற்றம் எற்றட்டது, அதிர்ஷ்தட்ட வசமாக 127 பயணிகள் உயிர் தப்பினர்.


 

 
டெல்லியில் இருந்து மும்பைக்கு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் விமானம் புறப்பட்டு வந்தது.
 
127 பயணிகளுடன் வந்த அந்த விமானம் மும்பை விமான நிலையத்தில் தரை இறங்க முயன்றபோது திடீரென தொழில் நுட்பக்கோளாறு ஏற்பட்டது.
 
த்தை தரை இயக்குவதற்கான முக்கிய "கியர்" இயங்கவில்லை. இதனால் விமானிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
 
அதனால், விமானத்தை மெதுவாக தரை இறங்க முடிவு செய்தனர். அதன்படி விமானம் ஓடு தளத்தில் உரசியபடி வந்து தரை இறங்கியது.
 
இதனால், அதிர்ஷ்டவசமாக எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. இதனால் விமானத்தில் இருந்த 127 பயணிகளும் உயிர் தப்பினார்கள்.
 
இந்நிலையில், முக்கிய ஓடு பாதையில் அந்த விமானம் சிக்கி நின்றதால் பிற விமானங்களை தரையிறங்குவதில் சிரமம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.