வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 25 ஜூன் 2016 (11:24 IST)

யோகாவில் பங்கேற்ற நடிகைக்கு ரூ. 1.5 கோடி - அரசுக்கு கண்டனம்

சர்வதேச யோகா நிகழ்ச்சியில் பங்கு கொள்வதற்காக நடிகை பிபாஷா பாஸுவிற்கு ரூ. 1.5 கோடி பணம் வழங்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
கடந்த ஜூன் 21ஆம் தேதி 2-வது ஆண்டாக இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டும், இந்தியா உள்பட 135க்கும் மேற்பட்ட நாடுகளில் இன்று யோகா பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
சர்வதேச யோகா தினம் முன்னிட்டு நாடு முழுவதும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டில்லி, சென்னை, மும்பை, பெங்களூரூ உள்ளிட்ட பகுதிகளில் யோகா சிறப்பு பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது.
 
இந்நிலையில், கர்நாடக அரசு சார்பில் பெங்களூருவில் நடந்த யோகா நிகழ்ச்சிக்கு பிரபல இந்தி நடிகை பிபாசா பாசு அழைக்கப்பட்டு இருந்தார். பிபாசா பாசுவுடன் மாநில முதல் மந்திரி சீத்தராமையாவும் யோகாவில் கலந்துகொண்டார். 
 
இந்த யோகா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிபாஷா பாஸுக்கு ரூ.1.5  கோடி கொடுக்கப்பட்டதாக எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அத்துடன் பிபாசா பாசு பெங்களூரு வந்து செல்வதற்கான விமான பயணச்செலவை கர்நாடக அரசே ஏற்றுள்ளது.
 
யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக இவ்வளவு பெரிய தொகையை செலவு செய்திருப்பது அபத்தமானது என்று கர்நாடக அரசுக்கு பல்வேறு அமைப்புகளும், எதிர்கட்சிகளும் குற்றம் சாட்டியுள்ளன.
 
”ஏன் பிபாஷா பாஸுவை யாகா நிகழ்ச்சிக்கு அழைத்தீர்கள். விளம்பரத்திற்காகவா? அப்படியென்றால் ஏன் சன்னி லியோனை அழைக்கவில்லை. சன்னி லியோனை அழைத்திருந்தால் இதை அதிக அளவில் விளம்பரம் கிடைத்திருக்குமே” என்று ஸ்ரீ ராம் சேனா நிறுவனர் பிரமோத் முத்தலிக் கேள்வி எழுப்பியுள்ளார்.