வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 10 ஜூன் 2016 (12:32 IST)

தங்குவதற்கு இடமில்லாமல் தெருவில் வசிக்கும் நடிகை : அதிர்ச்சி வீடியோ

தன்னுடைய குடும்பத்தினர் கை விட்டு விட்டதால், தங்க இடம் இல்லாமல் தெருவில் வசிக்கும் ஒரு பாலிவுட் நடிகை பற்றிய வீடியோ ஒன்று வெளியாகி மும்பை பட உலகில் பரபரப்பை ஏறபடுத்தியுள்ளது.


 

 
செய்தியை படித்ததும், ஏதோ வயதான பழைய நடிகை என்று நினைத்து விட வேண்டாம். அவர் தற்போது திரைப்படங்களில் நடித்து கொண்டிருக்கும் இளம் நடிகை ஆவார். 
 
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் நகரத்தை சேர்ந்தவர் அலிஷா கான். மாடலாக இருந்து சினிமாவில் நடிக்க தொடங்கியவர். பாலிவுட் நடிகர் இம்ரான் ஹஷ்மியுடன் “ஆய்னா” என்ற படத்தில் நடித்துள்ளார். அந்த படம் வருகிற ஆகஸ்டு மாதம் வெளியாக உள்ளது.
 
சமீபத்தில் வெளியான “மை ஹஸ்பண்ட்ஸ் ஒயிப்” என்ற படத்தில் கதாநாயகியாகவும் இவர் நடித்துள்ளார். மேலும்,  பல இசை வீடியோக்களிலும் அவர் நடித்துள்ளார்.


 

 
இந்நிலையில், இவரது முன்னாள் காதலருக்கும், அவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையை தொடர்ந்து அந்த நபர், அவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டார்.  மேலும், இன்னும் பல வீடியோக்களை வெளியிடப் போவதாகவும் அவர் மிரட்டினார். இதனால் அலிஷா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து அந்த வீடியோக்கள் இணையதளத்திலிருந்து  அகற்றப்பட்டன.
 
இந்த சம்பவங்களால் கோபமடைந்த அலிஷான் தாயும், சகோதரரும் அவரை வீட்டை விட்டு விரட்டிவிட்டனர். இதனால், தங்குவதற்கு இடம் இன்றி, தற்போது டெல்லியில் உள்ள கிரேட்டர் கைலாஷ் குடியிருப்பு பகுதியில் சாலையோரங்களில் வசித்து வருகிறார். 
 
இரவு நேரங்களில் தெருக்களிலும், கோவில்களிலும் உறங்குகிறார். இவர் பற்றிய வீடியோவை ஒரு தனியார் தொலைக்காட்சி வெளியிட்டது.
 

Courtesy to India Today