1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By Murugan
Last Modified: ஞாயிறு, 21 மே 2017 (19:41 IST)

கைவிட்ட படங்கள் - இறங்கி வந்த நடிகை...

சமீபத்தில் வெளியான லிங்கம் படம் தோல்வி அடைந்ததால் விரக்தியில் இருக்கிறார் குத்துச்சண்டை நடிகை.


 

 
இவர் நடித்த முதல் படம் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்தது. மேலும், முதல் படத்திலேயே சிறப்பாக நடித்ததால், சிறந்த நடிகை என்ற பெயரும் பெற்றார். அதன்பின் அப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தார்.
 
இதனால், தன்னை படத்திற்கு ஒப்பந்தம் செய்ய வரும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களிடம், பெற்றோர்களிடம் கதை சொல்ல வேண்டும். அதுவும் ஹிந்தியில் கூற வேண்டும், முத்தகாட்சியில் நடிக்க மாட்டேன் என பல கண்டிஷன்களை போட்டார். 
 
ஆனா, சமீபத்தில் நடன இயக்குனருடன் நடித்த லிங்கம் திகில் படம் ஊத்திக்கொண்டது. தற்போது அவரின் கையில் ஒரே ஒரு படம் மட்டுமே இருக்கிறது. இதனால் தன்னுடைய கண்டிஷன்களை தளர்த்திக் கொண்டு, இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்டு வருகிறாராம் நடிகை..