வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. இந்திய வகைகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 14 செப்டம்பர் 2016 (11:56 IST)

ஓணம் ஸ்பெஷல்: கேரள அடை பாயாசம்

கேரளாவில் ஓணம் பண்டிகையில் விருந்தில் பரிமாறப்படும் பாயசங்களில் இந்த அடை பாயாசத்திற்கு தனி இடமுண்டு. இந்த பாயாசம் இல்லாமல் ஓணம் பண்டிகை முழுமை அடையாது. 

 
தேங்காய்ப் பாலில் இந்தப் பாயாசம் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். 
 
தேவையான பொருட்கள்:
 
அரிசி அடை – 50 கிராம் 
 
துருவிய வெல்லம் – 125 கிராம்
 
முதலில் பிழிந்த தேங்காய்ப் பால் – அரை கிண்ணம்
 
இரண்டாவது பிழிந்த தேங்காய்ப் பால் – இரண்டரை கிண்ணம்
 
நெய் – ஒரு தேக்கரண்டி
 
ஏலக்காய்த் தூள் – கால் தேக்கரண்டி
 
சுக்குத் தூள் – கால் தேக்கரண்டி
 
சிறிதாக அரிந்த தேங்காய்த் துண்டுகள் – ஒரு தேக்கரண்டி
 
முந்திரி பருப்பு – 10
 
திராட்சைப் பழம் – 10
 
செய்முறை:
 
1. முதலில் வெல்லத்தில் அரை கிண்ணம் நீர் ஊற்றி உருக விட்டு அரைத்துக் கொள்ளவும்.
 
2. அரிசி அடையை இரண்டாவது தேங்காய் பாலில், சிறு தீயில் பத்து நிமிடம்  வேக விடவும். அதன் பின் உருக்கிய வெல்லத்தை சேர்த்து அடை குறுகி வரும் வரை கிளறவும். 
 
3. அதன்பின்னர், ஏலக்காய்த் தூள், சுக்குத் தூள் போடவும். நெய்யில் தேங்காய்த் துண்டுகளைக் கருகாமல் வறுத்துக் கொள்ளவும். முந்திரி பருப்பு, திராட்சைப் பழம் இவற்றையும் வறுத்துக் கொள்ளவும்.
 
4. முதலில் பிழிந்த தேங்காய்ப் பாலை அடையில் ஊற்றி ஒரு கிளறு கிளறியவுடன் இறக்கிவிடவும். அதனுடன் வறுத்த தேங்காய்த் துண்டுகள், முந்திரி, திராட்சை போடவும். அடை பாயாசம் தயார்.