வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Sasikala
Last Modified: புதன், 22 ஜூன் 2016 (13:02 IST)

ராணி விக்டோரியாவாக நடிக்கும் ஜுடி டென்ச்

ராணி விக்டோரியாவாக நடிக்கும் ஜுடி டென்ச்

ஜேம்ஸ் பாண்ட் பணிபுரியும் எம்16 உளவு நிறுவனத்தின் தலைவர் எம்மாக வரும் ஜுடி டென்சுக்கு உலக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.


 


அவரது கம்பீரமான நடிப்பு ஆஸ்கர் விருதையும் பெற்றுத் தந்திருக்கிறது.
 
ஸ்கைபால் படத்தில் எம் கொல்லப்படுவதாக கதை அமைத்திருந்தார் இயக்குனர் சாம் மென்டஸ். அதன் காரணமாக ஸ்பெக்டர் திரைப்படத்தில் ஜுடி டென்ச் நடிக்கவில்லை. ஜேம்ஸ் பாண்ட் படத்தில் அவர் இல்லாதது ரசிகர்களுக்கு ஒரு குறைதான்.
 
அந்தக்குறையை புதிய படம் ஒன்று போக்க வருகிறது. லண்டனைச் சேர்ந்த இந்திய பத்திரிகையாளர் ஷ்ரபானி பாசு எழுதிய, விக்டோரியா அண்ட் அப்துல் - த ட்ரூ ஸ்டோரி ஆஃப் த குயின் குளோசட் கான்பிடென்ட் புத்தகத்தை திரைப்படமாக எடுக்கின்றனர். அதில் ராணி விக்டோரியாவாக நடிக்க ஜுடி டென்ச் ஒப்பந்தமாகியுள்ளார்.
 
விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.