1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Sasikala
Last Modified: சனி, 21 மே 2016 (16:53 IST)

என் புருஷன் படத்தைப் பார்த்தா சிரிச்சிட்டே இருக்கலாம்

என் புருஷன் படத்தைப் பார்த்தா சிரிச்சிட்டே இருக்கலாம்

இந்தியில் ஹவுஸ்ஃபுல், ஹவுஸ்ஃபுல் 2 என இரு படங்கள் வந்துள்ளன. இந்த இரண்டு படங்களுமே ரீமேக் என்பது முக்கியமானது.


 
 
முதல் படம் கேரளாவில் வெளியான மாட்டுப்பட்டி மச்சான் என்ற படத்தின் ரீமேக். இன்னொன்று கமல், பிரபுதேவா நடித்த காதலா காதலா படத்தின் தழுவல். இரு படங்களும் 100 கோடிகளுக்கு மேல் வசூலித்தன. 
 
தற்போது ஹவுஸ்ஃபுல் 3 தயாராகியுள்ளது. அக்ஷய் குமாருடன், அபிஷேக் பச்சனும் நடித்துள்ளார். இந்தப் படம் குறித்து கருத்து கூறிய அபிஷேக்கின் மனைவி ஐஸ்வர்யா ராய், "நான் படத்தின் சில காட்சிகளைப் பார்த்தேன். 
 
செம காமெடி. அபிஷேக்கும், அக்ஷயும் உங்களை படம் முழுக்க சிரிக்க வைப்பார்கள்" என கூறியுள்ளார்.
 
சிரிக்கிறது இருக்கட்டும்... இது எந்தப் படத்தோட தழுவல்...?
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்