வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

உங்கள் சரும அழகை பளிச்சிட செய்யும் திராட்சை சாறு பேசியல்

பெண்கள் பொதுவாக அழகாகவும், ஆரோக்கியமாகவும் தங்களை வைத்துக் கொள்ள வேண்டும் என்றே விரும்புவார்கள். மற்றைய பெண்கள் தம்மைப் பற்றி பெருமையாக பேசிக்கொள்ள வேண்டும் என்பதும் எல்லாப் பெண்களுக்கும் பொதுவான ஒரு எதிர்பார்ப்பாகும்.

 
* திராட்சையில் அதிகப்படியான விட்டமின் ‘சி’ இருக்கிறது. இது நம் தோல் சுருங்குவதை தடுக்க உதவுகிறது.
 
இரவு தூங்குவதற்கு முன்னர் திராட்சை பழத்தை அரைத்து பேஸ் பேக்காக போட்டுக் கொண்டால் சரும சுருக்கம் நீங்கிவிடும்.
 
சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்குவதில் திராட்சை பழம் முக்கிய பங்கு வகிக்கிறது.
 
திராட்சை எண்ணெய்ப் பசையுள்ள சருமத்தினருக்கு மிகவும் நல்லது. 
 
கருப்பு திராட்சையை நன்றாக அரைத்துக் அந்த பேஸ்ட்டுடன் முல்தானி மெட்டி மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தடவுங்கள். 15 நிமிடம் கழித்து கழுவினால் உங்கள் முகம் பொலிவுடன்  காணப்படும்.
 
திராட்சை அரைத்த விழுது, அவகோடா அரைத்த விழுது, தேன் மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் பேஸ் பேக்காக போட்டு நன்றாக காய்ந்ததும் வெதுவெதுப்பான  தண்ணீரில்  கழுவினால் உங்கள் சருமம் மிருதுவாகும்.