வியாழன், 28 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 27 நவம்பர் 2015 (17:13 IST)

பூக்களில் இருக்கும் மருத்துவ குணம்

பூக்கள் சூட்டி கொள்ள மட்டுமல்லாமல் இயற்கையாகவே மருத்துவ குணம் நிறைந்து கானப்படுகிறது.


 

 
ரோஜாப்பூ:
ரோஜா இதழ்களை அப்படியே சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும். ரோஜா இதழ்களை உலர வைத்து அத்துடன் கஸ்தூரி மஞ்சள்தூள், பாசிப்பருப்பு சேர்த்து பொடி செய்து முகத்தில் பூசி உலர்ந்த பின் கழுவினால், முகம் பளபளப்பாக இருக்கும்.
 
மல்லிகைப்பூ:
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் மார்பில் பால் கட்டி விட்டால் மல்லிகை பூக்களை மார்பில் வைத்து கட்டினால் கட்டிய பால் கரைந்து விடும் என்பார்கள்.
 
தாமரைப்பூ:
தாமரைப் பூவை தொடர்ந்து சாப்பிட்டு வர நரை, மூப்பு, ஆகியவை ஏற்படாது.
 
வேப்பம்பூ:
கொதிக்கும் நீரில் வேப்பம் பூவை போட்டு ஆவி பிடித்தால் தலைவலி, காதுவலி நீங்கும்.  பித்த வாதத்தை போக்கும்.
 
அரளிப்பூ:
தலையில் வைத்து கொண்டால் பேன் ஒழியும்.
 
சூரியகாந்திப்பூ:
சூரியகாந்தி எண்ணெய் மிகவும் நல்லது. இது சூரியகாந்தி விதையிலிருந்து கிடைக்கும். இதயநோய் உள்ளவர்கள் இதைப் பயன்படுத்தலாம்.
 
செப்பருத்திப்பூ:
முடி உதிர்வதைத் தடுக்க இந்த செம்பருத்திப் பூ பயன்படும் கண் எரிச்சல் நீங்கும்.
 
சாமந்திப்பூ:
சாமந்திப்பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சிறுநீர் பிரச்சனைகள் தீரும். மேலும் இதனை காலையில் தேநீருக்கு பதிலாகவும் அருந்தலாம்.