Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஆரோக்கிய உணவுகள்

Widgets Magazine

ஆரோக்கிய உணவு என்றால் உணவுப்பொருள்களின் இயற்கையான நிறம், மணம், ருசியை இழக்காமலும், வைட்டமின்களையும், தாதுப்பொருள்களையும் பாதுகாப்பவையாகும்.


 

 
இயற்கை வைத்தியத்தில் தாது உப்புகள் நிரம்ப உள்ள இளங்கீரைகள், புதிதாய்ப் பறித்த இளங்காய்கறிகள், பழங்கள், தளிர்கள் முதல் தரமான உணவுகளாகும்.
 
இயற்கை வைத்தியத்தில் புரதப் பொருட்கள், மாவுப் பொருள்கள் மற்றும் சர்க்கரைப் பொருள்கள், கொழுப்புப் பொருள்கள் உள்ள தானியங்கள், பயிறுகள், கிழங்குகள், பருப்புகள் இரண்டாந்தரமான உணவுகள் ஆகும்.
 
உடலில் சக்தி உற்பத்தியாவதற்கும், உடலில் உள்ள செல்கள் வளர்ச்சியடைவதற்கும், உடல் உறுப்புகள் ஆரோக்கியமாகச் செயல்படுவதற்கும் உணவே காரணமாகிறது.
 
சத்தான உணவை விட ஜீரணிக்கும் உணவே உன்னத உணவு.  நோயை உண்டாக்காமல் ஜீரணிக்கக் கூடிய உணவையே உட்கொள்ள வேண்டும்.
 
உங்களது உடல்நிலை ஆரோக்கியமாக சாதாரண நிலையில் உள்ளதா என்பதனை மருத்துவரின் உதவியோடு அறிந்துகொள்ளவும்.

வெளியில் தெரியாத நோய்கள், பரம்பரை நோய்களின் தாக்கத்திற்கான வாய்ப்பு முதலிய விபரங்களையும் 
தெரிந்து வைத்திருத்தல் அவசியம். 

நோய்கள் ஏதேனும் இருப்பின், நோயின் தீவிரம், என்ன வகை, அதனால் தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை என்பது போன்ற கேள்விகளுக்கும் பதில் அறிந்துகொள்ளவது அவசியம் ஆகும்.
 
ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு எவ்வளவு சக்தி(கலோரி) தேவைப்படுகிறதோ அதற்கு ஏற்றதுபோல் உணவு உண்ணவேண்டும். ஒருவர் எத்தனை முறை உண்ணவேண்டும், எவ்வளவு உண்ணவேண்டும் என்பது அவரது வயது, பால், எடை, உடல் உழைப்பு இவற்றைப் பொறுத்து அமைய வேண்டும்.
 
சஞ்சீவி உணவுகளாக பழங்கள், காய்கறிகள், கீரைகள், தேங்காய், முளைகட்டிய தானியங்கள், முளைகட்டிய பயறு வகைகள் ஆகியவை உடலுக்கு ஏற்ற உணவுகள்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

இதயத்தை பாதுகாக்கும் உணவு முறைகள்

நாம்முடைய உணவை சத்துள்ளதாகவும், ஆரோக்கிய உணவாகவும் இருந்தால் தான் இதயத்தை பாதுகாக்க ...

news

புற்றுநோயைத் தடுக்கும் கேரட்

கேரட்டை தாவரத் தங்கம் என்று கூறுகிறார்கள். தாவரத்தங்கம் என்று பெயர் வந்ததற்குக் காரணம் ...

news

தேங்காயுடன் வாழைப்பழத்தை சேர்த்து உண்பதால் ஏற்படும் பயன்கள்

கனிகளுள் முதன்மை வகிப்பவை தெங்காயும் வாழைப் பழங்களும் ஆகும். இவை ஆண்டு முழுவதும் ...

news

பப்பாளியில் நிறைந்துள்ள மருத்துவ குணங்கள்

பல்வேறு மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டுள்ள பப்பாளி பழம் எங்கும் எளிதில் கிடைக்கக் ...

Widgets Magazine Widgets Magazine