வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : சனி, 25 மார்ச் 2017 (21:11 IST)

தினமும் காலை பல் துலக்குவது வேஸ்ட்

தினமும் காலையில் எழுந்தவுடன் நாம் அன்றாடம் பல் துலக்கும் பழக்கத்தை வழக்கமாக கொண்டுள்ளோம். ஆனால், அப்படி பல் துலக்குவது எந்த பலனும் இல்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 


 

 
இரவு நேரங்களில்தான் நம் பற்களில் கிருமிகளின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இரவு நேரங்களில் வாயில் பாக்டீரியாக்கள் லாக்டிக் அமிலத்தை சுரக்கின்றன. இந்த அமிலம் நம்முடைய பற்களை எளிதில் சிதைத்து விடுகின்றது. பற்களில் சொத்தை ஏற்படுவதற்கு இதுதான் முக்கிய காரணம்.
 
நாம் தூங்கிய அரை மணி நேரத்தில், கிருமிகள் நமது பற்களை சொத்தையாக்கும் வேலைகளில் ஈடுபடுகின்றன. எனவே காலையில் பல் துலக்குவது வேஸ்ட். தூங்குவதற்கு முன்பாக பற்களை துலக்குவது சிறந்தது. காலை நேரங்களில் சுடு தண்ணீர் அல்லது கொஞ்சம் உப்பு சேர்த்து வாயை சுத்தம் செய்தாலே போதும்.