வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. கட்டுரைகள்
Written By sivalingam
Last Modified: சனி, 25 மார்ச் 2017 (02:02 IST)

கைக்குழந்தையுடன் பயணம் செய்கிறீர்களா? அப்ப இதையெல்லாம் தெரிந்து கொள்ளுங்கள்

பிறந்த கைக்குழந்தைகளை வீட்டில் வைத்து பராமரிப்பது என்பதே ஒரு சவாலான விஷயம். இந்த நிலையில் பயணத்தின்போது குழந்தைகளை பாதுகாப்பாக வைத்து கொள்வது என்பது நிச்சயம் ஒரு கடினமான பணிதான். ஆனால் ஒருசில முன்னேற்பாடுடன் பயணம் செய்தால் குழந்தையின் நலன் குறித்து கவலைப்பட தேவையில்லை. இதுகுறித்து தற்போது பார்ப்போம்


 

 
 
குழந்தை பிறந்து இருவாரங்களுக்கு முன்பு விமானத்தில் பயணம் செய்ய அனுமதி இல்லை. இதை முதலில் விமானத்தில் பயணம் செய்யும் ஒவ்வொரு பெற்றோர்களும் தெரிந்து கொள்ள வேண்டும். இரண்டு வார கால அளவு என்பது நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடும். அதையும் சரியாக தெரிந்து வைத்து கொள்ளுங்கள் விமான நிறுவனங்களிடம் தெரிவிக்க வேண்டும். 
 
விமானம், பேருந்து, ரயில், கார் என எந்த போக்குவரத்தில் பயணம் செய்தாலும் பயணத்தின்போது குழந்தைகளின் காதுகளில் காற்று புகாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளின் காதுகளில் காற்றுபுகுந்தால் காதுவலி ஏற்பட வாய்ப்பு உண்டு.
 
நீண்ட தூரம் காரில் குழந்தையுடன் பயணம் செய்தால் பேபி கார் ஷிட்டை பயன்படுத்துங்கள். ஏனெனில் நீண்ட நேரம் குழந்தையை கையிலோ அல்லது மடியிலோ வைத்திருக்க முடியாது. சிலசமயம் மடியில் குழந்தை இருக்கும்போது நாம் கண்ணசந்து தூங்கிவிட்டால் குழந்தை கீழேவிழ வாய்ப்பு உள்ளது.
 
பயணத்தின்போது குழந்தை மேல் வெயில் படமால் பார்த்து கொள்ள வேண்டும். சூரியக்கதிர்கள் குறிப்பாக மதிய நேரத்தில் குழந்தை மீது படும் சூரியக்கதிர்களால் குழந்தையின் சருமம் பாதிக்கப்படும்
 
முக்கியமாக குழந்தையுடன் பயணம் செய்பவர்கள் குழந்தைகளுக்கு தேவையான மருந்துகள், கூடுதலான ஆடைகள், நாப்கின்கன் ஆகியவற்றை கண்டிப்பாகஎடுத்துச் செல்ல வேண்டும். போகிற இடத்தில் வாங்கிக்கொள்ளலாம் என கவனக்குறைவாக இருக்கக்கூடாது.
 
மூன்று வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுடன் பயணம் செய்தால் எந்தவித பிரச்சனை வராது என்பதால் மிகுந்த அவசியம் இருந்தால் மட்டுமே மூன்று வயதுக்குள் இருக்கும் குழந்தையையுடன் பயணம் செய்ய வேண்டும்