வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. கட்டுரைகள்
Written By Sasikala

IVF-ம் அக்குபஞ்சரும்!!

IVF-ம் அக்குபஞ்சரும்!!

IVF என்பது இன்வேட்ரோ பெர்டிலைசேசன் (In Vitro Fertilisation) என்பதாகும். இது ஒரு செயற்கை கருத்தரிப்புமுறை ஆகும். அதாவது கண்ணாடி குடுவை கருத்தரிப்பு என்றும் கூறலாம்.


 
 
இந்த முறையில் பெண்ணின் கருமுட்டை பை (Ovaries) யிலிருந்து கரு முட்டைகளையும் ஆணின் விந்தணுக்களையும் தனி தனியாக எடுத்து இரண்டையும் ஒரு கண்ணாடி குழாயில் சேர்த்து வைத்து கருவை உருவாக்குவார்கள். அந்த விதைக்கரு (Embryo) வை பெண்ணின் கருப்பைக்குள் வைத்துவிடுவார்கள். 
 
எளிதாக சொல்லவேண்டுமானால் ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்ளாமல் செயற்கை முறையில் பெண்ணின் கரு முட்டையும் ஆணின் விந்தணுவும் சேர்த்து கரு உருவாக்கி பிறகு பெண்ணின் கருப்பைக்குள் வைப்பதற்கு IVF என்று பெயர். 
 
எந்த ஒரு தம்பதியினரால் இயற்கையாக கருத்தரிக்க முடியவில்லையோ அவர்கள் அனைவருக்கும் இந்த IVF ஒரு வரப்பிரசாதம் ஆகும். இந்த IVF முறையில் கருத்தரிப்பு செய்வதற்கு அக்குபஞ்சர் மருத்துவம் பெரும் பக்கபலமாக இருக்கிறது.  அக்குபஞ்சர் உதவியுடன் இந்த செயற்கை கருதரிப்பிற்கு 1௦௦ சதம் (100%) முழு முடிவு கிடைக்கிறது.
 
சில தேர்ந்தெடுத்த அக்குபஞ்சர் புள்ளிகளை கொண்டு இந்த செயற்கை கருத்தரிப்பு முறையை சிறப்பாக வெற்றியடைய செய்யமுடியும்.
 
IVF ற்கு உகந்த அக்குபஞ்சர் மருத்துவம், மேலை நாடுகளில் உள்ள பெரும்பாலான செயற்கை கருத்தரிப்பு மையங்களில் தேர்ச்சி பெற்ற IVFற்கான அக்குபஞ்சர் மருத்துவரால் வழங்கப்படுகிறது.
 
உலக நாடுகளில் இந்த முறையில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதற்கு அக்குபஞ்சரும் ஒரு காரணமாகும்!!. இந்த செயற்கை கருத்தரிப்பு முறையில் ஏற்படக்கூடிய பல சிக்கல்களை அக்குபஞ்சர் தீர்த்துவைத்து 1௦௦ சதம் வெற்றிகரமான குழந்தை பிறப்பை பெற்றுத்தருகிறது. 
 
எப்படி அக்குபஞ்சர் மருத்துவம் செயற்கை கருதரிப்பிற்கு உதவி செய்கிறது என்பதை பின்வரும் கட்டுரைகளில் விவரமாக பார்ப்போம்.
 
தொடரும்.....
 
-த.நா.பரிமளச்செல்வி,
அக்குபங்க்சர் மருத்துவர்