செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. கட்டுரைகள்
Written By sivalingam

கம்ப்யூட்டரில் அதிக நேரம் வேலை செய்கிறீர்களா? விரல்கள் பத்திரம்

இப்போதைய டெக்னாலஜி உலகில் காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை நம் கையில் இருக்கும் ஒரே விஷயம் செல்போன் தான். செல்போன் மற்றும் கம்ப்யூட்டர் அதிகமாக பயன்படுத்துவதால் கண்ணுக்கு கெடுதல் என்று சொல்லி பார்த்திருப்பீர்கள். ஆனால் இவை கைவிரலுக்கும் பிரச்சனை கொடுக்கும் என்பது தெரியுமா?


 


ஆம், செல்போனை ஓயாமல் நோண்டி கொண்டிருப்பது, கம்ப்யூட்டரில் மவுஸ் மற்றும் கீ போர்டை உபயோகிப்பது என அனைத்துக்கும் விரல்தான் பொறுப்பு என்பதால் விரல்களில் நாளடைவில் வலி ஏற்படுகிறது. இதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

1. விரல்களில் வலி உள்ள இடத்தில் ஐஸ் பேக் அல்லது ஹாட் பேக்கை கொண்டு ஒத்தடம் கொடுக்கலாம்.

2. கை வலியைச் சரிசெய்ய சில எளிய மசாஜ்கள் உள்ளன. கை விரல்களில் வலி இருக்கும் இடத்தைக் கண்டறிந்து, மற்றொரு கையின் ஆள்காட்டி விரலை வலி உள்ள இடத்தில் வைத்து சற்று அழுத்தித் தேய்த்தால் போதும். விரல் வலி மாயமாய் மறைந்துவிடும்

3. மணிக்கட்டு பகுதியில் வலி இருந்தால் மற்றொரு கையின் ஆள்காட்டி விரல் மற்றும் பெருவிரலால் சுற்றிப் பிடித்து சற்று அழுத்தி, தேய்த்துக் கொடுத்தால் வலி குறையும்

4. முழங்கையில் வலி ஏற்பட்டால் அந்த வலியை நீக்க, கைகளை நேராக நீட்டி மணிக்கட்டை மேலும் கீழும் அசைக்க வேண்டும். பின்னர் முழங்கையை மடக்கி நீட்ட வேண்டும். இதேபோல் ஒருசில விநாடிகள் செய்தால் விரல்களுக்கு புத்துணர்வு கிடைக்கும்

5. இதற்கு மேலும் தொடர்ந்து வலி இருந்தால் உடனே ஒரு பிசியோதெரப்பி டாக்டரை பார்க்கவும். வலி சிறியதாக இருக்கும்போதே டாக்டரை அணுகிவிட்டால் பெரிய பிரச்சனைகளில் இருந்து தப்பித்து கொள்ளலாம்.