வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. கட்டுரைகள்
Written By sivalingam
Last Modified: வியாழன், 13 ஏப்ரல் 2017 (06:46 IST)

பாலியல் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் செக்ஸ் பொம்மைகள்: அதிர்ச்சி தகவல்

ஆண், பெண் உறவு என்பது ஒரு புனிதமான உறவு என்ற நிலை நாள் ஆக ஆக மாறி அதுவொரு வன்முறை, இச்சை, காமம் என்ற அளவில் மட்டுமே தற்போது உள்ளது. லிவிங் டு கெதர், பாலியல் வன்முறை, கலாச்சார சீர்கேடு ஆகியவை காரணமாக செக்ஸ் என்பதே தற்போது அருவருப்பான செயலாக பார்க்கப்படுகிறது.



 


இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிநாட்டில் அறிமுகமான செக்ஸ் பொம்மைகள் தனிப்பட்ட நபர்களின் இச்சையை தீர்த்து வைத்த நிலையில் தற்போது இந்த பொம்மைகளை பாலியல் தொழிலுக்கும் புகுத்திவிட்டனர்.

எய்ட்ஸ் நோய், எதிர்ப்பு இல்லாமை, எந்த முறையிலும் உறவு கொள்ளூம் வசதி, ரியல் பெண்களை விட அழகு என பல பாசிட்டிவ் இருப்பதால் தற்போது பெரும்பாலான கஸ்டமர்கள் ரியல் பெண்களை விட பொம்மை பெண்களை அதிகம் விரும்புவதாக பாலியல் தொழில் செய்பவர்கள் கூறுகின்றார்களாம்.

ஆனால் தாம்பத்தியம் என்பது மனதில் இருந்து எழும் உணர்ச்சி என்ற நிலை மாறி இதுவொரு இயந்திரத்தனமாக உறவாக மாற வாய்ப்பு இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அதாவது கிரிக்கெட் விளையாட மைதானம் சென்ற போது இருந்த உடல் ஆரோக்கியம், இன்று மொபைலில் விளையாடும் கிரிக்கெட்டின் போது காணாமல் போனதோ. அப்படி தான், உண்மையான தாம்பத்தியம் போய், போலி தாம்பத்தியம் அதிகரிக்கும் போது உணர்ச்சி, உணர்வு சார்ந்த ஆரோக்கியம் குறைந்து போகும் என்று அவ்ர்கள் கூறி வருகின்றனர்.

பொம்மைகள் என்பது விளையாடுவதற்கு மட்டும்தான், அதை உறவுக்கு பயன்படுத்தினால் மனித இனமே அழிய, மனிதனே கண்டுபிடித்த ஒரு அற்புத கண்டுபிடிப்பாக இந்த செக்ஸ் ரோபோட்கள் மாறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.