வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya
Last Modified: வியாழன், 11 ஆகஸ்ட் 2016 (11:38 IST)

ரிலையன்ஸ் ஜியோவிற்கு போட்டியாக ஏர்டெல்லின் புதிய திட்டம்

ரிலையன்ஸ் ஜியோவிற்கு போட்டியாக ஏர்டெல்லின் புதிய திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாமின் சலுகைகளுக்கு போட்டியாக  பார்தி ஏர்டெல் நிறுவனம் தனது போஸ்ட்-பெய்ட் பிராட்பேண்ட் அல்லது டிடிஎச்(DTH) வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் சலுகைகளை அறிவித்துள்ளது.


 


பார்தி ஏர்டெல் தலைமை செயலாளர் ஹேமந்த குமார் குருசாமி, வரம்பற்ற உள்ளூர், வெளியூர் (எஸ்டிடி) அழைப்புகள் மற்றும் ரோமிங் அழைப்புகள், எஸ்எம்எஸ் மற்றும் தரவு போன்றவற்றை புதிய போஸ்ட்பெய்ட் திட்டமாக அறிவிக்க இருக்கிறது என்று தெரிவித்தார்.

ஏர்டெல் நிறுவனத்தின் பிராட்பேண்ட் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் வீட்டில் யாரெல்லாம் கூடுதலாக ஒரு போஸ்ட்பெய்ட் மொபைல் சேவை அல்லது டிஹிட்டல் டிவி சேவையை பயன்படுத்த 5 ஜிபி வரை இலவச தரவை அளிக்கிறது.  

ஏர்டெல் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்கள் வீட்டில் இரண்டு ஏர்டெல் போஸ்ட்பெய்ட் மொபைல் எண் மற்றும் ஒரு ஏர்டெல் டிஜிட்டல் டிவி இணைப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தி வந்தால் கூடுதலாக 15 ஜிபி தரவை பெறலாம் என்று கூறியுள்ளது.

இந்த மை ஹோம் ரிவார்ட்ஸ் சலுகைகளைப் பெற மை ஏர்டெல் ஆப் செயலியை பயன்படுத்தி தங்களது இணைப்புகளைப் பதிவு செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்