செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (10:03 IST)

ஜியோ-வின் அடுத்த 6 புரட்சி: என்னவென்று தெரியுமா??

வரம்பற்ற டேட்டா மற்றும் வாய்ஸ் சேவைகளை வழங்கிய ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் டிடிச் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.


 
 
இலவச டேட்டா, வாய்ஸ் கால்கள் என இலவச சேவைகளை வாரி வழங்கும் ஜியோ நிறுவனம் அதன் புதிய பயனர்களுக்காக 6 எனத்தொடங்கும் மொபைல் எண்கள் ஒதுக்க அனுமதி பெற்றுள்ளதாக தெரிகிறது. 
 
தொலைத் தொடர்புத் துறை (DOT) ஆனது இதுபோன்றதொரு அனுமதியை முதல் முறையாக ரிலையன்ஸ் ஜியோவிற்கு வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதன் மூலம் 6 சீரிஸ் எம்எஸ்சி (மொபைல் நிலைமாற்றம் குறியீடு) தொலைபேசி எண்களை வெளியிடுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
 
அசாம், ராஜஸ்தான், மற்றும் தமிழ்நாட்டில் இந்த 6 சீரிஸ் எம்எஸ்சி குறியீடுகள் வழங்கப்பட உள்ளது. மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத்தில் 7 சீரிஸ் எம்எஸ்சி குறியீடுகளும், கொல்கத்தா மற்றும் மகாராஷ்டிராவில் 8 சீரிஸ் எம்எஸ்சி குறியீடுகளும் பெற்றுள்ளது.
 
இந்த 6 சீரிஸ் மொபைல் எண்களை அறிமுகம் செய்வதின் மூலம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தினால் மாநிலங்களை அடிப்படையாக கொண்ட சேவைகளில் முன்னோக்கி செல்லமுடியும் என தெரிகிறது.