1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 16 மே 2017 (15:49 IST)

இந்தியாவில் அதிகரிக்கும் போலி சந்தை

பிராண்டட் பொருட்கள் போலவே போலி உருவாக்கப்பட்டு சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் இந்திய சந்தையின் மதிப்பு பல கோடி என புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது.


 

 
முன்பு சீனாவில் அனைத்து பொருட்களும் பொலி ஒருவாகப்பட்டு சந்தையில் விற்பனையாகி வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது சீன போலி பொருட்கள் இறக்குமதி அதிக அளவில் எல்லா நாடுகளிலும் குறைந்துவிட்டது.
 
இந்நிலையில் தற்போது இந்தியாவில் போலி பொருட்களின் சந்தை அதிகரித்து வருகிறது. இதன் மதிப்பு ஐம்பாதியிரம் கோடி என புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இது மின்னணு சாதனப் பொருட்கள்தான் அதிகம். பிராண்டட் பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்க முடியாதவர்கள், விலை குறைவாக கிடைக்கும் இந்த போலி பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள்.
 
இதனால் இந்தியாவில் போலி சந்தை அதிகரித்து வருகிறது. சீனாவில் இருந்து மின்னணு உதிரிபாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் அசெம்பிள் செய்து சந்தையில் விற்கப்பட்டு வருகிறது. இதை பலரும் உண்மையான பிராண்டட் பொருள் என நினைத்து வாங்கி வருகின்றனர்.