வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 19 ஆகஸ்ட் 2016 (11:56 IST)

விரைவில் வரப்போகும் பஜாஜ் பல்சர் விஎஸ் 400 பைக்: ஒரு கண்ணோட்டம்

விரைவில் வரப்போகும் பஜாஜ் பல்சர் விஎஸ் 400 பைக்: ஒரு கண்ணோட்டம்

இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் ஆட்டோ, பல்வேறு சிறப்பான வாகனங்களை தயாரித்து வருகிறது. 


 
 
பஜாஜ் பல்சர் விஎஸ் 400 பைக்கின் அறிமுகம், பஜாஜ் ஆர்வலர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் வாகனங்களில் ஒன்றாக உள்ளது. பஜாஜ் பல்சர் விஎஸ்400 என்பது தான், பஜாஜ் பல்சர் சிஎஸ்400 என்று அழைக்கபட்டு வந்த பைக்கிற்கு சூட்டப்பட்டுள்ள புதிய பெயராகும். 

இஞ்ஜின்:

பஜாஜ் பல்சர் விஎஸ் 400 பைக்கிற்கு, சிங்கிள் சிலிண்டர் உடைய 373.2 சிசி, லிக்விட் கூல்ட் இஞ்ஜின் பொருத்தபட்டுள்ளது. இந்த இஞ்ஜின் 8,000 ஆர்பிஎம்களில் 35 பிஹெச்பியை வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.
 
கியர்பாக்ஸ்:
 
பஜாஜ் பல்சர் விஎஸ் 400 பைக்கின் இஞ்ஜின், 6-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கிறது.
 
ஃபோர்க்:
 
கான்செப்ட் வடிவில் இருந்த பஜாஜ் பல்சர் விஎஸ் 400 பைக்கிற்கு, தலைகீழாக பொருத்தபட்ட ஃபோர்க்குகள் இருக்கும். ஆனால், இதன் உற்பத்தி நிலை மாடலில், வழக்கமான ஹைட்ராலிக் ஃபோர்க்குகள் பொருத்தபட்டுள்ளது.
 
பிரேக்:

பஜாஜ் பல்சர் விஎஸ் 400 பைக்கின், முன் பக்கத்திலும், பின் பக்கத்திலும், டிஸ்க் பிரேக்குகள் பொருத்தபட்டுள்ளது.
 
எடை:
 
பஜாஜ் பல்சர் விஎஸ் 400 பைக்கின் எடை, 332 கிலோகிராம் இருக்கும் என கூறிப்பிடப்பட்டுள்ளது.
 
பைக்கின் பிற முக்கிய அம்சங்கள்:
 
தேர்வு முறையிலான ஏபிஎஸ் எனப்படும் ஆண்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம், பின் பகுதியில் மோனோ சஸ்பென்ஷன் மற்றும் எல்இடி லைட்கள், பஜாஜ் பல்சர் விஎஸ் 400 பைக்கின் முக்கியமான அம்சங்ககளாக உள்ளன.
 
பஜாஜ் பல்சர் விஎஸ்400 பைக்கின் குரூஸிங் அம்சங்களை கவனித்துக் கொள்ளும் வகையில் இதன் இஞ்ஜின் ரீ-ட்யூன் செய்யபட்டுள்ளது. 
 
பஜாஜ் பல்சர் விஎஸ் 400 பைக் உச்சபட்சமாக மணிக்கு 165 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் திறன் கொண்டுள்ளது. இது ஒரு லிட்டர் எரிபொருளுக்கு 25-28 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் திறன் கொண்டுள்ளது.

பஜாஜ் பல்சர் விஎஸ் 400 பைக்கின் விலை, ரூ.2 லட்சம் அல்லது அதற்கும் குறைவான விலையிலேயே விற்கபட வாய்ப்புகள் உள்ளது.