வியாழன், 28 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. பண்டிகைகள்
Written By Sasikala

கார்த்திகை அன்று கடைபிடிக்கவேண்டிய விரத முறைகள்!!

கார்த்திகை மாதத்தில் வருகின்ற கார்த்திகை நாள் ஏனைய கார்த்திகை நாட்களினை விடவும் விமர்சையாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்ற ஒரு விழா. மாலைவேளையில் வீடுகளின் வெளிப்புறங்களிலும், வீட்டு முற்றத்திலும் விளக்கேற்றிக் கொண்டாடுவார்கள்.



திருக்கார்த்திகை தினத்தன்று ஆலயங்களில் தீபத்திருவிழா நடைபெறும். பக்தர்கள் தீப விளக்குகள் ஏற்றிவைத்து வழிபடுவர். திருக்கார்த்திகையன்று காலையில் குளித்ததும், 7:30 மணிக்குள் குலதெய்வத்தை மனதில் நினைத்து பூஜை செய்ய வேண்டும். 
 
சிவனுக்கும், முருகனுக்கும் உரிய பாடல்களைப் பாட வேண்டும். அன்று மாலை வரை மந்திற்குள் அண்ணாமலைக்கு அரோகரா, நமசிவாய, சிவாயநம, சரவணபவ ஆகிய மந்திரங்களை உச்சரிக்க வேண்டும். 
 
மாலை ஆறு மணிக்கு விளக்கேற்ற வேண்டும். ஆறு விளக்குகலுக்கு குறையக்கூடாது. விநாயகர், முருகன், சிவன் படங்களை வைத்து பழம், வெற்றிலை பாக்கு, பொரி, பிடி கொழுக்கட்ட ஆகியவர்றை நைவேத்யம் செய்ய வேண்டும். தீபாராதனை காட்டி பிரசாதம் சாப்பிட்டு விரதம் முடிக்க வேண்டும்.
 
தொடர்ந்து விரதமிருக்க விரும்புபவர்கள் திருக்கார்த்திகையன்று தொடங்கி, அடுத்த திருக்கார்த்திகை வரை அனுஷ்டித்தால் முருகன் அருளால் அனைத்து நலமும் பெறலாம்.
 
கோவிலில் ஏற்றப்படும் தீபத்திற்கு அவ்வளவு மகத்துவம் உண்டு.  நாம் முற்பிறவியில் அறியாமல் செய்த பாவங்கள் கூட கோவிலில் தீபம் ஏற்றுவதாலும், தீபத்தை தரிசிப்பதாலும் விலகி விடும். அதனால், திருக்கார்த்திகை அன்று கோவில்களில் தீபஸ்தம்பம், அணையாதீபம், லட்சதீபம், கோடி தீபம் என்று பல பெயர்களில் ஏற்றி வைப்பர். கோவில் முன் சொக்கப்பனை கொளுத்துவர். சிவனையும், முருகனையும் அக்னி வடிவமாக வழிபடுவர்.