வியாழன், 28 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 19 ஜனவரி 2017 (18:26 IST)

சுழன்றடித்த பழைய இந்திய சிங்கங்கள்; 381 ரன்கள் குவிப்பு - திணறிய இங்கிலாந்து

மகேந்திர சிங், யுவராஜ் சிங் ஆகியோரின் அபார சதத்தால் 6 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச ஒருநாள் போட்டியில் சதம் விளாசி அசத்தியுள்ளார்.


 

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இரு அணிகளுக்கு இடையேயான 2ஆவது ஒருநாள் போட்டி கட்டாக் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவிச தீர்மானித்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.

தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் 5 ரன்களில் வெளியேறினார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி 8 ரன்களிலும், அடுத்த சில ஓவர்களிலே ஷிகர் தவான் 11 ரன்களிலும் வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். இதனால், இந்திய அணி 25 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

இதனால், இந்திய அணியை வீழ்த்திவிடலாம் என இங்கிலாந்து அணி நினைத்திருக்கும். ஆனால் அதற்கடுத்து, யுவராஜ் சிங் - தோனி ஜோடி களம் கண்டது. நீண்ட நாட்களுக்குப் பிறகு இணைந்த இந்த ஜோடி தங்களது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும், இதோ எங்களது ஆட்டம் என்று காட்டியது போல் இருந்தது.


 

அபாரமாக ஆடிய யுவராஜ் சிங் 98 பந்துகளில் [15 பவுண்டரிகள், 1 சிக்ஸர்] சதம் விளாசினார். மேலும், இருவரும் இணைந்து 4ஆவது விக்கெட்டுக்கு 200 ரன்கள் குவித்துள்ளது. யுவராஜ் சிங் 6 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச ஒருநாள் போட்டியில் சதம் விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பைப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சதம் விளாசியிருந்தது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து வீரர்கள் எவ்வளவோ முயற்சித்து பார்த்தது. ஆனால், இருவரும், குறிப்பாக யுவராஜ் சிங் அநாசியமாக விளாசி எறிந்தார்.

ஒருவழியாக 150 ரன்கள் எடுத்திருந்த நிலையில் யுவராஜ் சிங் கிறிஸ் வோக்ஸ் பந்தில் அவுட்டானார். இதில், 21 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அடங்கும். தொடர்ந்து கேதர் ஜாதவ் 10 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதற்கிடையில் தோனியும் சதம் விளாசினார்.

தோனி 122 பந்துகளில் [10 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள்] 134 எடுத்து வெளியேறினார். இறுதியாக இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 381 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளையும், பிளங்கெட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.