வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 6 மார்ச் 2017 (17:48 IST)

சரிவில் இருந்து சற்று மீண்ட இந்திய அணி: 126 ரன்கள் முன்னிலை

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைப்பெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 213 குவித்துள்ளது.


 

 
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்திய 189 ரன்கள் குவித்து முதல் நாளிலே ஆல் ஆவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 276 ரன்கள் குவித்தது. இதைத்தொடர்ந்து மூன்றாவது நாளான இன்று இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.
 
தொடக்க ஆட்டக்காரர் முகுந்த் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். ராகுல் அரை சதம் அடித்து 51 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் கோலி 15 ரன்களில் அவுட் ஆகி இந்த முறையும் ஏமாற்றினார். கோலியை தொடர்ந்து ஜடேஜா 2 ரன்களில் வெளியேறினார்.
 
தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து பரிதாப சூழலில் இருந்தது. புஜாரா மற்றும் ரகானே கூட்டணி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டுள்ளது. இருவரும் நிதானமான ஆட்டத்தால் இந்திய அணி தற்போது 126 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.