வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. குழந்தை வளர்ப்பு
Written By Mahalakshmi
Last Modified: புதன், 29 ஜூலை 2015 (15:21 IST)

சளி பிடித்திருந்தால்...

குழந்தைகளுக்கு சளி பிடிப்பது என்பது பெற்றவர்களுக்கு சவாலான விஷயம். ஏன், எப்படி சளி பிடிக்கும் என்றேக் கூற முடியாது.
 
எனினும் சளியைக் கட்டுப்படுத்த சிறந்த கை வைத்தியம் உள்ளது-
 
பல வீடுகளில் தொட்டிகளில் வைத்து பராமரிக்கப்பட்டு வரும் கற்பூரவல்லிச் செடி தான் அந்த மாமருந்து. கற்பூரவல்லி இலைகள் பார்ப்பதற்கு தடிமனாகவும், மிகவும் மிருதுவாகவும் இருக்கும்.
 
உங்கள் குழந்தைக்கு குடிப்பதற்காக கொதிக்க வைக்கும் நீரில், சுத்தமாக அலசி வைத்திருக்கும் 4 அல்லது 5 கற்பூரவல்லி இலைகளைப் போட்டு சிறிது நேரம் கழித்து எடுத்துவிடுங்கள். இலையின் சாறு முழுமையாக நீரில் இறங்கி தண்ணீர் லேசாக பச்சை நிறத்தை அடைந்து இருக்கும். 
 
அந்த நீரை மட்டும் குழந்தைகளுக்கு பருகுவதற்குக் கொடுங்கள். 2 அல்லது 3 நாட்களுக்கு இதுபோன்ற நீரையே கொடுத்து வாருங்கள். குழந்தைக்கு சளியின் தீவிரம் கட்டுப்படும்.