வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பட்ஜெட்- 2017-18
Written By Sasikala
Last Modified: புதன், 1 பிப்ரவரி 2017 (12:28 IST)

பட்ஜெட் 2017 ரயில்வே திட்டத்தில் புதிய மாற்றங்கள்: அருண் ஜெட்லி!

2017-ஆம் ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதனையடுத்து இன்று நிதியமைச்சர் அருண்  ஜெட்லி மத்திய பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். முதல் முறையாக ரயில்வே பட்ஜெட்டுடன் இணைந்து இன்று தாக்கல் செய்யப்படுகிறது. ரயில்வே பட்ஜெட், பொது பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டது வரலாற்று முக்கியவத்தும் வாய்ந்தது.

 
ரயில்வேத்துறை சுதந்திரமாக இயங்கும். ரயில் பாதுகாப்புக்காக ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படும்.  போக்குவரத்து  உள்கட்டமைப்பு வசதிகளுக்காக 2.41 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
 
இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் புதிய மெட்ரோ ரயில் கொள்கை உருவாக்கப்படும். ரயில் பயணிகளின்  பாதுகாப்பு, தூய்மைக்கு முக்கியத்தும் தரப்படும்.
 
ஐஆர்சிடிசி இணையதளத்தில் முன்பதிவு செய்யப்படும் ரயில் பயணச்சீட்டுகளுக்கு சேவை வரி ரத்துசெய்யப்படும். 3,500 கி.மீ  தூரத்திற்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படும்.
 
அகல ரயில் பாதை தடத்தில் 2020க்குள் ஆளில்லா ரயில்வே கேட் இல்லாத நிலை உருவாக்கப்படும். 7000 ரயில்களில் சூரிய  ஒளி மின்திட்டம் செயல்படுத்தப்படும்.
 
பயணிகளுக்கு உதவ ரயில் பெட்டிகளில் உதவியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். புனித பயணம், சுற்றுலா செல்பவர்களுக்கு  தனியாக ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்படும்.
 
2019-ஆம் ஆண்டிற்குள் அனைத்து ரயில் பெட்டிகளிலும் பயோ-டாய்லெட் வசதி உருவாக்கப்படும். வரும் நிதியாண்டில் சிறப்பாக  செயல்படும் 25 ரயில் நிலையங்களுக்கு விருது அளிக்கப்படும்
 
500 ரயில் நிலையங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்றவாறு வசதிகள் ஏற்படுத்தி தரப்படும்.