Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

எந்த நாட்டினர் எவ்வளவு மது குடிக்கலாம்? - ஆய்வு தகவல்

Last Modified: சனி, 24 டிசம்பர் 2016 (17:56 IST)

Widgets Magazine

"பிற" பானங்கள் என்றால் என்ன?


 

மால்டட் பார்லியிலிருந்து வருவது பீயராகவும், புளித்த திராட்சையிலிருந்து வருவது ஒயினாகவும், மேலும் பிற காய்ச்சி வடிகட்டிய பானங்கள் ஆல்கஹால் கொண்ட பானங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.

ஆனால் அதில் ஆல்கஹால் மூலம் தயாரிக்கக்கூடிய பானங்களை சேர்க்கவில்லை. ஆப்பிள், பேரிக்காய்கள் மூலம் தயாரிக்கப்பட்ட "சைடர்" அல்லது அரிசியால் தயாரிக்கப்படும் "சேக்" ஆகிய பானங்கள் "பிற" வகைகள் என்று இந்த பக்கத்தில் உலக சுகாதார நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள தகவலில் இடம்பெறுகின்றன.

சோளத்தால் தயாரிக்கப்படும் பீயர்களும் "பிற" வகையில் சேரும்; சோளம் வெப்பமான பருவநிலைகளிலும் வளர்க்கூடியது; மேலும் கடுமையான வறட்சியிலும் அது தாக்குப்பிடிக்க கூடியவை எனவே அது சஹாரா பாலைவனத்துக்கு தெற்கே உள்ள ஆப்ரிக்க நாடுகளில் பரவலாகக் காணப்படுகிறது.

காய்ச்சி வடிகட்டும் முறையை உள்ளடக்கிய கலப்பு நொதித்தல் முறையால் தயாரிக்கப்படும் "போர்ட்" என்னும் ஒயின் பிற வழக்கமான ஒயின்களிலிருந்து பிரிக்கப்பட்டு, உலக சுகாதார நிறுவனத்தால் "பிற" பானங்கள் வகையில் சேர்க்கப்பட்டுள்ளது.

கணக்கீடு பற்றி:

நீங்கள் ஆல்கஹால் உட்கொள்ளும் தகவலுடன், உலக சுகாதார நிறுவனத்தின் தகவல் தளத்தில் உள்ள ஒவ்வொரு நாட்டின் மொத்த மக்கள் தொகையால் உட்கொள்ளப்படும் சராசரி பீர், ஒயின், ஆல்கஹால் பானம் மற்றும் பிற பானங்கள் அனைத்தும் சேர்த்து, நெருக்கமாக பொருந்தும் நாட்டின் கணக்கீடு மேற்கொள்ளப்படும். 

15 வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண், மற்றும் மது அருந்துபவர்கள், மற்றும் மது அருந்தாதவர்கள் என அனைவரும் அதில் அடங்குவர்.

பைண்ட் பீயர் அல்லது சைடரில் சராசரியாக ஐந்து சதவீதமும், ஒயினில் 12 சதவீதமும், ஆல்கஹால் பானங்களில் 40 சதவீதமும், ஆல்கஹால் கலந்த ஒயினில் 17.5 சதவீதமும் மற்றும் சேக் ஒயினில் 9 சதவீதமும் ஆல்கஹால் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிப்பதாக கருதப்படுகிறது.

தகவல் குறித்து:

ஒரு ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த ஆல்கஹால் உட்கொள்ளுதல் தகவலை சேகரித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிடுகிறது; வரி ரசீதுகள் மற்றும் ஏற்றுமதி - இறக்குமதி தகவலை அடிப்படையாக கொண்டு பிரிக்கப்பட்ட பானங்களின்படி அது அமைகிறது.

மேலும் இந்த நிறுவனம் "கணக்கில் வராத" ஆல்கஹால் உட்கொள்ளுதலையும் கணக்கிட முயற்சிக்கிறது. வீடுகளில் தயாரிக்கப்படும் அல்லது நாட்டில் கடத்தி கொண்டு வரப்படும் அல்லது மனிதர்கள் உட்கொள்ளுதலுக்கல்லாமல் இருக்கும் வட்டாரங்களில் இருந்து எடுத்த தகவல்கள் அதில் சேர்க்கப்படுகிறது.

இந்த இரண்டாம் வகை அதிகாரப்பூர்வ வகையை காட்டிலும் அதிகமாக உள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது அதில் அனைத்திலும் அதிகமாக மால்டோவா நாடு உள்ளது என்று ஆய்வின் மூலம் கிடைத்த தகவல்படியும் வல்லுநர்களின் கருத்துபடியும் தெரிகிறது. 

அதன் விளைவாக இந்த பக்கத்தில் உள்ள புள்ளியியல் விவரம் நிச்சமயற்ற நிலையில் இல்லை.

மேலும் விவரங்களுக்கு உலக சுகாதார நிறுவனத்தின் வலைத்தளத்தை பார்க்கவும்.

ஒவ்வொரு பானங்களிலும் எத்தனை யூனிட் ஆஹ்கஹால் உள்ளது?:

  • ஒரு ஷாட் ஆல்கஹால் பானத்தில்(25மிலி): 1 யூனிட்
  • சாதாரண அளவு கொண்ட ஒயின் கோப்பை(175மிலி): 2.1 யூனிட்டுகள்
  • பெரிய ஒயின் கோப்பை (250மிலி): 3 யூனிட்டுகள்
  • 4% ஆஹ்கஹால் அளவு கொண்ட பீரின் ஒரு பைண்ட்: 2.3 யூனிட்டுகள்
  • 5% ஆஹ்கஹால் அளவு கொண்ட பீரின் ஒரு பைண்ட்: 2.8 யூனிட்டுகள்
  • 8% பைண்ட் சைடர்: 4.5 யூனிட்டுகள்

ஆல்கஹால் அளவு - அதிகார பூர்வ அறிவுரை:

மூன்று அல்லது நான்கு யூனிட்டுகளுக்கு மேலாக ஆல்கஹாலை எடுத்துக் கொள்ளும் ஆண்கள் அதிகப்படியான உடல் உபாதைகளுக்கும் மேலும் உயிரிழக்கும் ஆபத்தும் அதிகமாகிறார்கள் என்று இங்கிலாந்தின் சுகாதாரத் துறை அறிவுறுத்துகிறது.

பெண்களுக்கு அந்த அளவு, இரண்டு அல்லது மூன்று யூனிட்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதிகபடியாக குடிக்கும் சமயங்களில் மோசமான உடல்நிலை ஆபத்துக்கள் நேரிடும் என்றும், அதிகமாக ஆல்கஹால் உட்கொண்டால் அடுத்த 48 மணி நேரம் அதை உட்கொள்ளாமல் இருக்க வேண்டும் என்றும் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

ஸ்காட்லாந்தில் உள்ள மக்கள் ஒரு வாரத்தில் குறைந்தது இரண்டு நாட்களாவது ஆல்கஹாலை உட்கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பது அதிகாரப்பூர்வ அறிவுரையாகும்.

ஒரே சமயத்தில் 7.5 யூனிட்டுகள் மது உட்கொள்வது அதிகப்படியாக ஆல்கஹால் உட்கொள்வதாக கருதப்படுகிறது.

இந்த அளவிற்கு மாதம் ஒரு முறை குடித்தால் கூட, சராசரி ஆல்கஹால் உட்கொள்ளும் அளவு குறைவாக இருந்த போதும் "மோசமான விளைவுகளை" ஏற்படுத்தும்.


Widgets Magazine

Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :  
news

வன்முறைக் காதலுக்கு வழிகாட்டுகிறதா திரைப்படங்கள்?

பெண்களுக்கு எதிராக சமூகத்தில் நடைபெறும் பல குற்றங்களுக்கு சில சமயங்களில் திரைப்படங்கள் ...

news

ஜெயலலிதா உயில் இருக்கிறதா, இல்லையா?

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான சொத்துக்கள் யாருக்குச் சொந்தம் என்று கேள்விகள் ...

news

போலி செய்திகள்: புதிய அம்சங்களை அறிவித்தது ஃபேஸ்புக்

உலகிலேயே மிக பெரிய சமூக ஊடக வலைதளமாக விளங்குகின்ற ஃபேஸ்புக் (முகநுல்) போலி செய்திகள் ...

news

திரைத் துறையிலிருந்து அரசியலில் நுழைந்து வெற்றிக்கொடி நாட்டிய ஜெயலலிதா

தமிழகத்தின் முதல்வராக நான்குமுறை பதவி வகித்த ஜெயலலிதா ஜெயராம் எனப்படும் செல்வி ஜெ. ...

Widgets Magazine Widgets Magazine