வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Murugan
Last Updated : செவ்வாய், 30 மே 2017 (19:11 IST)

ஆன்டிபயோட்டிக் மருந்துகளை எதிர்க்கும் கிருமிகளை அழிக்க ''மேஜிகல்' மருந்து

உலக சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்துவரும் பிரச்சனைகளில் ஒன்றான, ஆன்டிபயோட்டிக் மருந்துகளுக்கு எதிர்ப்பு காட்டும் நோய்த்தொற்றுகளை சமாளிக்க, அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய மருந்தை தயாரித்துள்ளனர்.


 

 
ஆராய்ச்சியாளர்கள் தற்போதுள்ள வான்கோமைசின் (vancomycin) என்ற மருந்தை மாற்றி அதன் ஒரு ''மேஜிகல்' பதிப்பை தயாரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
 
சிறுநீர்ப் பாதைக் குழாய் மற்றும் காயங்களில் தொற்று ஏற்படுத்தும் சாதாரண பாக்டீரியாகளை எதிர்கொள்ளும் தன்மையை வான்கோமைசின் இழந்துவருகிறது என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
 
இந்த வான்கோமைசினின் புதிய பதிப்பானது வித்தியாசமான வழிகளில், சுமார் ஆயிரம் மடங்கு அதிக ஆற்றலுடன் தாக்கும். அதனால் நோய் தொற்றுகள் இந்த மருந்தை எதிர்த்துப் போராடுவது என்பது சிரமம்தான்.
 
ஆன்டிபயோட்டிக் மருந்துகளுக்கு எதிர்ப்பு காட்டும் பாக்டீரியாகள்தான் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஆண்டுதோறும் சுமார் ஐம்பது ஆயிரம் மரணங்களை ஏற்படுவதாகக் கருதப்படுகிறது.