வியாழன், 28 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. கட்டுரைகள்
Written By Sasikala

பெண்களுக்கு தைராய்டுவால் ஏற்படும் பாதிப்புகள்

பெண்களுக்கு தைராய்டுவால் ஏற்படும் பாதிப்புகள்

நமது உடம்பில் பலவகையான நாளமில்லா சுரப்பிகள் உள்ளன. ஹார்மோன்களை உற்பத்தி செய்து உடலில் உள்ள செல்களுக்கு அதை செலுத்தி, அந்த செல்களை வேலை செய்ய வைப்பதே அவற்றின் பணி.


 


அதில் ஒன்றுதான் தொடை பகுதியில் இருக்கும் தைராய்டு சுரப்பி.
 
இந்த சுரப்பி சுரக்கும் தைராக்ஸின் ஹார்மோன்தான் நமது உடலின் சீதோஷ்ணநிலையை சீராக வைத்திருக்கும். தோலின் மென்மைத்தன்மையை பாதுகாப்பது, மாதவிடாயை ஒழுங்கு படுத்துவது, முடி வளரும் வேகம், குழந்தைகளின் வளர்ச்சி இவை அனைத்தையும் பராமரிக்கும். இந்த தைராய்டு சுரப்பியில் கட்டிகள் இருந்தால் குறைவாக சுரக்கும். அல்லது அதிகமாக சுரக்கும். இதனால் உடல் நலம் பாதிக்கும்.
 
தைராக்ஸின் குறைந்தால் உடல் எடை அதிகரிப்பு, அதிக ரத்த போக்கு, முறையற்ற மாதவிடாய், தோலின் மிருதுத் தன்மை குறைவு, அதிகமான முடி உதிர்தல், மலச்சிக்கல், உடல் வலி, மன அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

இப்படி உடலில் பிரச்சினைகள் ஏற்படும்போது மருத்துவரிடம் சென்று முறையான சிகிச்சை பெறாவிட்டால், உடல் எடை அதிகரித்து இதயத்தை சுற்றியுள்ள பையில் நீர் சேர்ந்து, நாடித்துடிப்பு குறைந்து, மன அழுத்தம் முற்றிய நிலைக்குச் செல்லக் கூடும். கோமா நிலைகூட ஏற்படலாம்!
 
அதிகமான தைராய்டு சுரந்தால் எடை குறையும்! இதயத்துடிப்பு அதிகமாகும், கோபம், தூக்கமின்மை, மாதவிடாய் கோளாறுகள், வயிற்று போக்கு என பல சிக்கல்கள் ஏற்படும்.
 
பிரசவ காலத்தில் பெண்களுக்கு மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பி பாதிக்கபட்டு, சங்கிலித்தொடர் நிகழ்வாக தைராய்டு சுரப்பியும் பாதிக்கபடலாம். அதனாலும் தைராய்டு பிரச்சினை ஏற்படலாம். பிரசவத்திற்கு பின்னர் குறிப்பிட்ட சில மாதங்கள் கழித்தும் முறைபடி மாதவிடாய் வராவிட்டால்… மருத்துவரிடம் சென்று தைராய்டு பரிசோதனை மேற்கொள்வது அவசியம்.
 
குழந்தையின்மைக்கு தைராய்டும் ஒரு காரணம் என்பதால், பரிசோதனை செய்து கொள்வது அவசியம். அதேபோல் மெனோபாஸ் காலத்திற்கு பின்னரும் தைராய்டு பிரச்சினை தோன்றும். ஆனால் அதற்கான அறிகுறிகள் அதிகம் தெரியாது. ஆதலால், ஐம்பது வயது கடந்த பெண்கள் தைராய்டு பரிசோதனை எடுத்துக் கொள்வது அவசியம்.