வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Murugan
Last Modified: புதன், 15 பிப்ரவரி 2017 (13:56 IST)

டி.டி.வி தினகரனை முதல்வராக்கும் சசிகலாவின் கனவு பலிக்குமா?..

சசிகலாவின் சகோதரி மகனும், சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு செல்ல உள்ள சுதாகரனின், சகோதரனுமான டி.டி.வி. தினகரன், அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


 

 
சொத்துக் குவிப்பு வழக்கின் திர்ப்பு சசிகலாவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இனி, அவர் அரசியலில் பிரவேசிக்க முடியாது என்றாலும், அதிமுக பொதுச்செயலாளர் பதவி அவரிடம் இருக்கிறது. தான் சிறைக்கு சென்றால், ஓ.பி.எஸ் கட்சியை கைப்பற்றி விடுவார் என யோசித்த சசிகலா, டி.டி.வி தினகரனை துணைப் பொதுச்செயலாளராக்கும் முடிவுக்கு வந்துள்ளார்...
 
சசிகலா குடும்பத்தினர் நான்கு பேருக்கு கட்சியில் பதவி கொடுத்தார் ஜெயலலிதா. இதில், தினகரனின் கட்சி நடவடிக்கைகள் அவருக்கு பிடித்ததால், பொருளாலர், ஜெ. பேரவை செயலாளர், மக்களை, மாநிலங்கள உறுப்பினர் என 4 பதவிகள் கொடுத்து ஜெ. அழகு பார்த்தார். அதனால், அதிமுக வட்டாரத்தில் தினகரனுக்கு எப்போது பெரிய மரியாதை உண்டு..  


 

 
அதேபோல், 2011ம் ஆண்டு சசிகலா, தினகரன் உள்ளிட்டவர்களை கட்சியிலிருந்து ஜெ. நீக்கினார். மேலும், சிலர் மீது புகார் சுமத்தி சிறையிலும் அடைத்தார். ஆனால், தினகரனை அவர் எதுவும் செய்யவில்லை... எதிலும் அதிரடியாக இறங்காமல், அமைதியாக பேசி காரியத்தை சாதிப்பவர் தினகரன். கட்சியினரிடம் நல்ல பேர் இருக்கிறது. எனவே, கட்சியை வழி நடத்த அவர்தான் சரியான வழி என்ற முடிவிற்கு சசிகலா வந்துள்ளார். 
 
ஆனால், அமலாக்கப் பிரிவு வழக்கை எதிர்கொண்டிருப்பவர் தினகரன். இருந்தும், அதை புறந்தள்ளி விட்டு, கட்சியை அவர் வசம் ஒப்படைத்துள்ளார் சசிகலா.. அவருக்கு உரிய அதிகாரங்கள், பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் எனத் தெரிகிறது..
 
எப்படியும் ஆட்சி அமைக்க ஆளுநர் எடப்பாடி பழனிச்சாமியை அழைப்பார். ஒருவேளை ஓ.பி.எஸ் அழைக்கப்பட்டாலும், அவரால், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என சசிகலா நம்புகிறார். எனவே, தற்போதைக்கு எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக முன்னிறுத்தினாலும், பின்னால் கட்சியில் கால் ஊன்றிய பின், முதல்வர் பதவியில் டி.டி.வி தினகரனை அமர வைக்க சசிகலா முடிவு செய்துள்ளதாக தெரிகிறது..
 
அதிமுகவில் ஓ.பி.எஸ்-ஐ, டி.டி.வி தினகரன்தான் வளர்த்து விட்டார். முதல்வர் பதவி ஓ.பி.எஸ் பொருத்தமானவர், என சசிகலாவிடம் முன் மொழிந்தவரும் அவர்தான். எனவே, தினகரன் மீது, ஓ.பி.எஸ்-ற்கு பெரிய மரியாதை உண்டு. ஆனால், அவரையே தனது அரசியல் எதிரியாக சந்திக்கவுள்ளார் ஓ.பி.எஸ்...
 
சசிகலாவின் கனவு நிறைவேறுமா?.. ஓ.பி.எஸ் வெற்றி பெறுவாரா?.. காலம் பதில் சொல்லும்....